தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தோகை விரித்தாடும் அழகு மயில் - பொதுமக்கள் சிலிர்ப்பு! - மயில்

தருமபுரி வாணியாறு அணை அருகே மழைமேகம் சூழ்ந்தபோது ஒரு மணி நேரம் தோகை விரித்தாடிய அழகு மயில் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

மயில்
மயில்

By

Published : Oct 11, 2021, 10:17 AM IST

தருமபுரி: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. தருமபுரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்துவருகிறது.

இங்குள்ள பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த வாணியாறு அணை, சேர்வராயன் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஏற்காடு மலையில் நாள்தோறும் அடிக்கடி மழை பெய்துவருவதால், வாணியாறு அணையில் நீர் நிரம்பி வழிகிறது.

இதனால் இந்தப் பகுதியில் எப்பொழுதும் குளுகுளு சூழல் நிலவிவருகிறது. நேற்று காலை முதலே வாணியாறு அணை பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தோகை விரித்தாடும் அழகு மயில்

மாலை 4 மணி அளவில் வாணியாறு அணைப் பகுதியில் இரண்டு மயில்கள் இரை தேடி சுற்றித் திரிந்து வந்தன. அப்போது கருமேகம் சூழ்ந்து மழைப் பொழியும் சீதோஷ்ண நிலை மாறியபோது, அங்கிருந்த மயில் தோகையை விரித்தாடியது.

தொடர்ந்து கருமேகம் சூழ்ந்துவந்ததால், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மயில் தோகையை விரித்து உற்சாகமாக அகவிக் கொண்டே (மயில் எழுப்பும் ஒலியின் பெயர்) ஆடியது. வாணியாறு அணைப் பகுதியில், அழகு மயில் தோகை விரித்தாடிய ரம்மியமான காட்சியைப் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

இதையும் படிங்க:'இந்தியா 75' - புதிய வடிவில் வெளியான 'மிலே சுர் மேரா துமாரா' பாடல்

ABOUT THE AUTHOR

...view details