தருமபுரி மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவான பசுமைத் தாயகம் அமைப்பு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மாவட்டம் முழுவதும் ஏற்படுத்திவருகிறது.
இந்த அமைப்பினர் கடந்த வாரம் தருமபுரி டவுன் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே இரண்டு கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் கொடுத்தால் ஒரு கிலோ தரமான அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி பொதுமக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து அந்த அமைப்பின் மாநில துணை அமைப்பாளர் மாது, கம்பை, நல்லூர், கடத்தூர் பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளை பெற்றுக்கொண்டு பொதுமக்களுக்கு அரிசியினை வழங்கினார்.
பிளாஸ்டிக் குப்பைக்கு வெள்ளி நாணயம் வழங்கும் பசுமை தாயகம் அமைப்பினர் இதேபோல் அதிக அளவில் கிராமமக்கள் ஒன்று கூடும் இடமான நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில், பிளாஸ்டிக் குப்பைகள் இரண்டு கிலோ கொடுத்தால் ஒரு கிராம் வெள்ளி நாணயம் மற்றும் ஒரு கிலோ அரிசி வழங்கும் முகாமை நடத்தினர்.
இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் தங்கள் வீடுகளில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வெள்ளி நாணயத்தையும், அரிசியையும் பெற்றுச்சென்றனர்.
பிளாஸ்டிக் குப்பைகளை வாங்கி கொண்டு வெள்ளி நாணயம் வழங்கும் பசுமை தாயகம் அமைப்பினர் இதையும் படியுங்க:பிளாஸ்டிக் கழிவுகளுக்கு குட்- பை சொல்லும் சிங்கப் பெண்கள்..!