தருமபுரி: கோவை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் வரும் 30ம் தேதி முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை பாரத பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று கோவையில் தொடங்கியது.
அதாவது கோவையில் காலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை ஓட்டம் திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக தருமபுரிக்கு வந்தது. தருமபுரி ரயில் நிலையத்திற்கு காலை 8.30 மணிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 14 நிமிடங்கள் முன்பாகவே தருமபுரி ரயில் நிலையம் வந்த வந்தே பாரத் 2 நிமிடம் நின்று கடந்து சென்றது.
தற்போது தருமபுரிக்கு முதல் முறையாக வந்த வந்தே பாரத் ரயிலை வரவேற்க ரயில் பயணிகள் நல சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரயில் நிலையத்தில் குழுமி நின்று ரயிலை வரவேற்றனர். மேலும் ரயில் பயணிகள் ரயிலின் முன்பு நின்று செல்பி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.