தர்மபுரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பல பள்ளிகளில் மாணவ, மாணவியர் உட்கார முறையான இருக்கைகள் இல்லாததால் அவர்கள் தரையிலேயே அமர்ந்து பாடங்கள் படித்து வருகின்றனர்.
மழை காரணமாக பள்ளியின் தரை மிக குளிர்ச்சியாக காணப்படுகிறது. கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. இதில் காலை நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் மழையில் நனைந்துகொண்டே பள்ளிக்கு வருகின்றனர்.
குளிர்ந்த தரையில் அமர்ந்து படிக்கும் மாணவ-மாணவிகள்