தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி உலகானஹள்ளி பகுதிகளில் உள்ள அரசுநடுநிலைப்பள்ளியில் 300 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். மதிய உணவு திட்டத்திற்கு உணவு சமைக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஓட்டை உடைசல் உடன் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆறு மாதங்களாக இந்த ஓட்டைப் பாத்திரத்தில் சமையல் பணியாளர் சமையல் செய்து பள்ளி மாணவர்களுக்கு வழங்குகிறார். இப்பாத்திரத்தில் சமையல் செய்யும்போது துவாரத்தின் வழியே தண்ணீர் வெளியேறுகிறது. ஆனால் சமையல் பணியாளர் பல நெருக்கடிகளையும் தாண்டி மாணவர்களுக்கு உணவு சமைத்து வழங்குகிறார்.