தருமபுரி, இலக்கியம்பட்டியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் கரோனா வைரஸ் நிவாரண நிதி, மளிகைப் பொருள்கள், அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
'உலகத்தில் எங்கே கரோனா தொற்று வந்தாலும் தருமபுரிக்கு வராது' - Pappireddipatti mla says corona wont attack dharmapuri
தருமபுரி: உலகத்தில் எங்கே கரோனா தொற்று வந்தாலும் தருமபுரிக்கு வராது என பாப்பிரெட்டிப்பட்டி சட்டபேரவை உறுப்பினர் கோவிந்தசாமி தெரிவித்துள்ள சம்பவம் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
!['உலகத்தில் எங்கே கரோனா தொற்று வந்தாலும் தருமபுரிக்கு வராது' Pappireddipatti mla says corona wont attack dharmapuri](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6856979-thumbnail-3x2-s.jpg)
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டபேரவை உறுப்பினர் கோவிந்தசாமி, 'பொதுமக்கள் தற்போது கடைப்பிடித்து வருவது போல தருமபுரி மாவட்டத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கரோனா வைரஸ் நோய்த் தொற்று இல்லாத, தருமபுரி மாவட்டத்தை உருவாக்கிய மக்களுக்கு நன்றி. உலகத்தின் எந்த மூலையில் கரோனா வைரஸ் வந்தாலும் தருமபுரி மாவட்ட மக்கள் வீட்டிலிருந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் தருமபுரி மாவட்டத்தை கரோனா தாக்காது' என்றார்.
இதையும் படிங்க... நிவாரண உதவிக்கு இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்