பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரம் வரும் நாள் பங்குனி உத்திரம் என அழைக்கப்படுகிறது. பங்குனி உத்திரம் நட்சத்திர தினத்தை சிவன்-பார்வதி, முருகன்-வள்ளி, தெய்வானை திருமண நாளாகவும், ப்ரம்மா-சரஸ்வதி திருமண தினமாகவும், வைணவர்களைப் பொறுத்தவரை ஆண்டாள் திருமணமாகவும் பெரும்பாலும் அனைத்து ஆலயங்களிலும் திருமண நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது.
அன்னசாகரம் முருகன் ஆலயத்தில் திருத்தேர் திருவிழா - அன்னசாகரம்
தருமபுரி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அன்னசாகரம் முருகன் ஆலயத்தில் திருத்தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று பங்குனி உத்திரத்தையொட்டி, முருகன் ஆலயங்களில் பங்குனி உத்திரத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தருமபுரி மாவட்டம் அன்னசாகரம் அருள்மிகு விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி திருத்தேர் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழா இன்று நடைபெற்றது. முருகன் வள்ளி தெய்வானை சகிதம் தேரிலே அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இதனையொட்டி, ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.