தருமபுரி மாவட்ட ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் கடத்தூர் அருகே உள்ள நல்ல குண்டல அள்ளி பகுதியில் வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 700 காளைகள் கொண்டு வரப்படுகின்றன. 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.
தருமபுரி மாவட்டம் கடத்துரில் ஜனவரி 27ஆம் தேதி ஜல்லிக்கட்டு - Dharmapuri district
தருமபுரி மாவட்டத்தில் கடத்தூரில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால் கோள் நடும் விழா இன்று (ஜன.8) நடைபெற்றது.
Etv Bharatதருமபுரி மாவட்டம் கடத்துரில் ஜல்லிக்கட்டு விழாவிற்கான பந்தகால் நடும் நிகழ்ச்சி
இதற்கான பூமி பூஜை மற்றும் கால் கோள் நடுவிழா இன்று (ஜனவரி 8) நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மனோகரன், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க மாவட்ட தலைவர் புஷ்பராஜ் பழனி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் தொடங்கியது