தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் முக்குளம் ஊராட்சியில் 2016-2019 ஆண்டில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக பொதுமக்கள் புகார் மனு அளித்திருந்தனர்.
அந்தப் புகாரில், முக்குலம் ஊராட்சியில் இறந்தவர் பெயரில் வீடு வழங்கியதாகவும், ஒரே நபருக்கு பிரதமர் வீடு வழங்கும் திட்டம், தமிழக அரசின் பசுமை வீடு திட்டம் ஒதுக்கீடு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் முக்குளம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் புகாரில் குறிப்பிட்டிருந்தனர்.