தர்மபுரி மாவட்டம் செம்மான்டகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மாது. அவர் இன்று(அக்.12) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் அவர், "செம்மாண்டகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்தான் இதுவரை ஊராட்சி மன்ற கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
ஆனால் தற்போதுள்ள ஊராட்சி மன்ற தலைவர் பானு பூமணி, அவரது வீட்டின் அருகே உள்ள குண்டல்பட்டி பள்ளி வளாக கட்டடத்திற்கு அலுவலகத்தை மாற்ற முடிவு செய்துள்ளார்.
அந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சார்பில் இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. அத்துடன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை குண்டல்பட்டி பள்ளி வளாகத்திற்கு மாற்றக் கூடாது என தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.