தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மைப் பணியாளரை கெளரவித்த பஞ்சாயத்து தலைவர்! - தூய்மைப் பணியாளரை கெளரவித்த பஞ்சாயத்து தலைவர்

தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே தூய்மைப் பணியாளரைத் தேசியக் கொடி ஏற்ற வைத்து பஞ்சாயத்து தலைவர் கெளரவப்படுத்தியுள்ளார்.

Panchayat
Panchayat

By

Published : Jan 26, 2021, 1:22 PM IST

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட இருளப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் 72 ஆவது குடியரசு தின விழா ஊராட்சி மன்ற தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தூய்மைப் பணியாளர் பழனியம்மாள் தேசியக் கொடியை ஏற்ற வைத்து, அனைவரும் கொடிக்கு வணக்கம் செலுத்தினர்.

இருளப்பட்டி பகுதியில் 10 தூய்மைப் பணியாளர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் கரோனா தடுப்பு, விழிப்புணர்வு பணியில் சிறப்பாகப் பணியாற்றியதால் இப்பகுதியில் ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை. எனவே இவர்களையும், இவர்களது பணியையும் கெளவரவிக்கும் விதமாக கொடியேற்ற வைத்ததாக, ஊராட்சி மன்ற தலைவர் குமார் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details