தமிழ்நாட்டில் இன்று முதல் 21 சுங்க சாவடிகளில் வாகனங்களின் சுங்க கட்டணம் 5 முதல் 15 வரை உயா்ந்துள்ளது.
தருமபுரி மாவட்டம், பாளையம்புத்தூரில் உள்ள பாளையம் சுங்கச் சாவடியில் கனரக வாகனம்(டிரக்), பேருந்துகளுக்கு மட்டும் ஒரு முறை சென்றால் ரூ.340 ஆகவும் பலமுறை சென்று வர ரூ.505 ஆக இருந்த நிலையில் பலமுறை சென்று வருவதற்கு முன்பிருந்த கட்டணங்களில் இருந்து 5 ரூபாய் அதிகரித்து தற்போது 510 ரூபாயாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.