தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட இண்டூர் பேருந்து நிலையம் அருகே ஒகேனக்கல் பிரதான சாலையில் ஓவியர்கள் நல சங்கம் சார்பில் கரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டது.
கரோனா விழிப்புணர்வு ஓவியம்: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஓவியர்கள்! - ஓவியர்கள் விழிப்புணர்வு
தர்மபுரி: இண்டூரில் ஓவியர்கள் நல சங்கம் சார்பில் கரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Painters Who Raised Public Awareness about corona
அதில், தனித்திரு, விழித்திரு, வீட்டிலிரு என்கின்ற விழிப்புணர்வு வாசகங்களும் இடம்பெற்றிருந்தன. சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள கிராம மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க இண்டூர் பகுதிக்கு வருகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில் ஓவியம் வரையப்பட்டுள்ளதாக ஓவியர்கள் தெரிவித்தனர்.