தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒரு சில பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகின்றன. அரூர், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சிட்லிங், சித்தேரி உள்ளிட்ட மாவட்ட எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது . மழை காரணமாக அறுவடைக்கு தயாராகவுள்ள நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வள்ளி மதுரை அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் வரட்டாறு வழியாக சென்று அருகேவுள்ள ஏரிகளுக்கு கால்வாய் மூலமாக செல்கின்றன. ஊராட்சி நிர்வாகம் இந்த கால்வாய்கள், ஏரி, குளம், குட்டைகளை குடிமராமத்து பணிகளை மேற்கொள்ளாமல் இருந்ததால் கால்வாய் வழியாகச் செல்லும் நீர் அருகேயுள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று வயல்கள் சேதமாகியுள்ளன.