நெல், கரும்பு, மஞ்சள் சாகுபடி உள்ளிட்டவை தருமபுரி மாவட்ட விவசாயிகளின் பிரதான தொழில் ஆகும். இந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக தருமபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தருமபுரி ராமக்கால் ஏரி பகுதியில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த இரண்டு நாட்களாக நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் தீவிரம் - pongal celebration
தருமபுரி: பருவமழை சரியாக பெய்ததால் மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
விவசாயிகள் கடந்த செப்டம்பர் மாதம் நெல் பயிரிட்டனர், தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. தைத்திருநாளில் புது அரிசியில், புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபடுவது தமிழர்களின் வழக்கம். இவ்வாண்டு சரியான பருவ காலங்களில் மழை பெய்ததால் மார்கழி மாதத்தில் அறுவடை பணிகள் தொடங்கின. தற்போது அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்துவார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு, மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்த பரப்பளவு அதிகமாக உள்ள காரணத்தால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பருவ மழை தொடர்ந்து பெய்து வந்ததால் மகசூல் கூடியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.