தர்மபுரி மாவட்டத்தில் இரு தினங்களாக தமிழ்நாடு உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, அமானிமல்லாபுரம், நல்லம்பள்ளி ஒன்றியம் இலளிகம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நல்லம்பள்ளியில் நடைபெற்றது.