தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 திரையரங்குகளில், அரூர், காரிமங்கலம் பகுதியில் உள்ள இரண்டு திரையரங்குகளில் மட்டுமே படங்கள் திரையிடப்பட்டது. இதில், காரிமங்கலம் திரையரங்கில் திரௌபதி படமும், அரூரில் இருட்டுஅறையில் முரட்டு குத்து படமும் திரையிட்டனா்.
படம் பார்க்க திரையரங்குக்கு வரும் பொதுமக்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு அரசு விதிமுறைகளை பின்பற்றி படங்களை திரையிட்டனா். கரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்கள் வராததால் திரையரங்குகள் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.