தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாத மாணவர்! - neet forgery in dharmapuri medical college

தருமபுரி: தருமபுரி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் ஒரு மாணவர் கலந்துகொள்ளவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

one-student-didnt-attend-the-certificate-verification-in-dharmapuri-medical-college

By

Published : Sep 28, 2019, 7:08 PM IST

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சம்பவம் தமிழ்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரியிலும் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

இதில் தருமபுரி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த இர்பான் என்ற மாணவர் ஒருவர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகியது.

தருமபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர்

இச்சம்பவம் குறித்து நமது செய்தியாளர் தருமபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாச ராஜூவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, ”சான்றிதழ் சரிபார்ப்புக்கு இர்பான் என்ற ஒரு மாணவர் வரவில்லை.

அவர் தொடர் விடுப்பில் சென்றுள்ளதால் அவருக்கும், அவரது பெற்றோருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகுதான் அவர் ஆள்மாறாட்டம் செய்தாரா இல்லையா என்பது தெரியவரும்" என்றார்.

இதையும் படிங்க: சங்கிலித் தொடராக உருமாறும் நீட் ஆள்மாறாட்ட விவகாரம்

ABOUT THE AUTHOR

...view details