தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு! - தருமபுரியில் மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

தருமபுரி: விலங்குகளைப் பிடிக்க வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த இளைஞர்
மின்வேலியில் சிக்கி உயிரிழந்த இளைஞர்

By

Published : Apr 8, 2020, 7:05 PM IST

தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொடக்கேரி கிராமத்தில் அடிக்கடி விவசாய நிலங்களை காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட வன விலங்குகள் சேதப்படுத்தி வந்துள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினரின் அனுமதியோடு மின்வேலிகள் அமைத்துள்ளனர்.

இந்நிலையில், வெள்ளோலை பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மின்வேலி அமைத்துள்ளது. அது தெரியாமல் காட்டுப்பன்றி வேட்டையாடுவதற்காக மற்றொரு கும்பலும் வேலி அமைத்துள்ளது.

இதையடுத்து, திருப்பதி (26) என்பவர் காட்டுப்பன்றிகள் ஏதேனும் சிக்கியுள்ளதா என்பதைப் பார்வையிடச் சென்றுள்ளார். அப்போது மற்றொரு குழுவினர் வைத்திருந்த மின்வேலி இருப்பது தெரியாமல் வேவியை தொட்டுள்ளார். மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த இளைஞர்

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல் துறையினர் நடத்திய விசாரணையில், வீரமணி (26), ரவி (23) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரழப்பு!

ABOUT THE AUTHOR

...view details