தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பணியாற்றி வந்தார். இவர் சென்னையில் இருந்து தருமபுரி திரும்பியதை அறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், அவருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்தனர்.
தருமபுரியில் மேலும் ஒரு நபருக்கு கரோனா; கோயம்பேட்டால் நேர்ந்த விபரீதம் - தருமபுரி மாவட்ட செய்திகள்
தருமபுரி: சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து பாலக்கோடு திரும்பிய நபருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலக்கோடு
பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தருமபுரி மாவட்டம் எலவடை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவருக்கு ஏற்கனவே கரோனா தொற்று உறுதியானதை அடுத்து சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று புதியதாக வைரஸ் தொற்று பெற்ற பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டத்தில் இதுவரை இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
TAGGED:
தருமபுரி மாவட்ட செய்திகள்