தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுவனை மலம் அள்ள வைத்த விவகாரம் - நில உரிமையாளர் ராஜசேகர் கைது!

பென்னாகரம் சிறுவனை 100 மீட்டர் தூரம் வரை நடந்து சென்று மலத்தை அப்புறப்படுத்த செய்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நில உரிமையாளர் ராஜசேகர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

By

Published : Jul 22, 2020, 1:25 PM IST

dharmapuri pennagaram caste discrimination
dharmapuri pennagaram caste discrimination

தருமபுரி: பென்னாகரம் சிறுவனை மலம் அள்ள வைத்த வழக்கில் நில உரிமையாளரை கைதுசெய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் நிலையத்தில் நில உரிமையாளரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை ஜூலை 17ஆம் தேதி புகாரளித்திருந்தார்.

சாதிய வன்கொடுமை: சிறுவனை மலம் அள்ள வைத்த கொடூரம்!

புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இவ்வேளையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் இதற்கான விளக்கம் கேட்டு ஜூலை 21ஆம் தேதி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கோடிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கோடாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன், விவசாய விளைநிலத்தில் மலம் கழித்ததாக நில உரிமையாளர் சிறுவனை அடித்து, மலத்தினை கைகளால் எடுக்க வைத்த விவகாரத்தில், காவல் துணை கண்காணிப்பாளர் மேகலா விசாரணை மேற்கொண்டார்.

சிறுவனை கையால் மலம் அள்ள வைத்த சம்பவம்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

விசாரணையில் நில உரிமையாளர் ராஜசேகர் (51) என்பவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்து, நீதிமன்றத்தில் முன்னிறுத்திய பின் தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details