தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஜகஸ்தானிலிருந்து தருமபுரி திரும்பியவருக்கு கரோனா - தருமபுரி மாவட்டதில் கரோனா எண்ணிக்கை

தருமபுரி: வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

corona status in dharmapuri
தருமபுரி கரோனா நிலவரம்

By

Published : Jun 30, 2020, 8:24 AM IST

தருமபுரி மாவட்டம் எட்டிமரத்துபட்டி பகுதியைச் சார்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர், கஜகஸ்தான் நாட்டில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கரோனா நெருக்கடி காரணமாக இவர் தவித்துவந்தார்.

இதையடுத்து அந்நாட்டிலிருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த அவர், அங்கிருந்து சென்னைக்கு மற்றொரு விமானத்தில் வந்து சேலம் வழியாக தருமபுரிக்கு திரும்பினார்.

இந்நிலையில் அவருக்கு சுகாதார ஊழியர்கள் கரோனா பரிசோதனை நடத்தினார்கள். இதில் அந்த இளைஞருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தற்போது மாவட்டத்தில் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கிருமி நாசினி தெளிப்பு

ABOUT THE AUTHOR

...view details