தர்மபுரி மாவட்டம் ஏ. ரெட்டி அள்ளி பகுதியில் அசாமில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு வேலைக்காக சென்ற 35 பேரை ஏற்றிக்கொண்டு ஆம்னி பேருந்து ஒன்று சோகத்தூர் அருகே சென்றுகொண்டிருந்தது.
ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் படுகாயம் - ஆம்னி பேருந்து விபத்து
தர்மபுரி: சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
அப்போது ஆம்னி பேருந்து ஓட்டுநர் கண் அயர்ந்ததால், கண் இமைக்கும் நேரத்தில் சாலையின் பக்கவாட்டில் இருந்த தடுப்பு சுவற்றில் மோதி வண்டி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 8 பயணிகள் படுகாயம் அடைந்தனர். சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகில் இருந்த ஊர் பொதுமக்கள் விரைந்து வந்து விபத்துக்குள்ளான பேருந்தில் சிக்கிக்கொண்ட பயணிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனால் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விபத்துக்குள்ளான பேருந்தை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.