தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகைக்காக 90 வயது மூதாட்டி கொலை - old woman murdered for gold in Dharmapuri pennagaram

தருமபுரி: பென்னாகரம் அருகே நகைக்காக 90 வயது மூதாட்டி கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

old woman murdered for gold in Dharmapuri
old woman murdered for gold in Dharmapuri

By

Published : Dec 13, 2020, 2:08 PM IST

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஆணைகல்லனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரி (90). இவருக்கு இப்பகுதியில் ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவரது மகள் தருமபுரியில் வசித்துவருகிறார். மூதாட்டி தனியாக ஆணைகல்லனூரில் வசித்துவந்துள்ளார். அவருக்கு ராஜா (35) என்பவர் உதவியாக இருந்து தேவையான உதவிகளைச் செய்துவந்துள்ளார்.

இச்சூழலில் மாரியின் காதில் அணிந்திருந்த முக்கால் பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டு மூதாட்டி சடலமாக கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் பென்னாகரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் துணை கண்காணிப்பாளர் மேகலா கொலை நடந்த இடத்தைப் பார்வையிட்டார்.

அப்போது மூதாட்டியின் கழுத்து நெரித்து கொலைசெய்யப்பட்டு அவர் காதிலிருந்த தங்க நகை திருடப்பட்டதைக் கண்டறிந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ராஜாவை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க... 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: உ.பி.யில் பயங்கரம்!

ABOUT THE AUTHOR

...view details