தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏரியூரில் சந்தேகத்துக்கிடமாக தீப்பிடித்த குடிசை வீடு - வீடு தீப்பிடித்து எரிந்து நாசம்

தருமபுரி: ஏரியூரில் மூதாட்டியின் குடிசை வீடு சந்தேகமான முறையில் தீப்பிடித்து எரிந்து நாசமடைந்தது.

Dharmapuri district news
Fire accident in Dharmapuri

By

Published : Jun 5, 2020, 4:56 PM IST

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்துக்குட்பட்ட ஏரியூர் ரெட்டியார் தெருவில் சின்ன பாப்பா (70) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் நேற்று (ஜூன் 4) வழக்கமாக சமையல் செய்து கொண்டிருந்தார்.

குடிநீர் எடுக்க வெளியே சென்றபோது திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்தத் தீ விபத்தில் மூதாட்டி வைத்திருந்த உணவுப்பொருள்கள், துணி உள்ளிட்ட 20 ஆயிரம் மதிப்புள்ள அத்தியாவசிய பொருள்கள் எரிந்து நாசமாயின.

மூதாட்டி சின்ன பாப்பாவின் கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு குழந்தை இல்லை. அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகையில் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

தனிமையில் வசித்து வரும் மூதாட்டியின் குடிசை வீடு சந்தேகமான முறையில் தீப்பற்றி எரிந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஏரியூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details