தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் கோயிலுக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு: நமது கிராம சபை இயக்கம் புகார் - Dharmapuri district news

தருமபுரி: இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நமது கிராம சபை இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

கிராம சபை இயக்கம் புகார்
கிராம சபை இயக்கம் புகார்

By

Published : Nov 2, 2020, 5:14 PM IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு புலிக்கரையில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமாக ஈஸ்வரன் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து துணிக்கடை கட்டிவருகின்றனர்.

இதற்கு திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறையைச் சேர்ந்த சில அலுவலர்களும் சுமார் மூன்று லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு ஆதரவு தெரிவித்துவருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.

இருப்பினும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று (நவ. 02) கோயில் நிலத்தை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நமது கிராம சபை இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: கிணற்றை ஆக்கிரமித்த ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை கோரி புகார்

ABOUT THE AUTHOR

...view details