தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் அடுத்தாண்டு செவிலியர் கல்லூரி - செந்தில்குமார் எம்பி - Nursing college

தருமபுரி மாவட்டத்தில் அடுத்த ஆண்டு செவிலியர் கல்லூரி தொடங்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தர்மபுரியில் அடுத்த ஆண்டு செவிலியர் கல்லூரி
தர்மபுரியில் அடுத்த ஆண்டு செவிலியர் கல்லூரி

By

Published : Oct 7, 2021, 1:39 PM IST

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரதமரின் பி.எம்.கேர் திட்டத்தின்கீழ் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 1000 லிட்டர் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி இன்று (அக். 7) தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி மக்களவை உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார், பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி, தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தருமபுரியில் அடுத்த ஆண்டு செவிலியர் கல்லூரி

பின்னர் செய்தியாளரைச் சந்தித்த செந்தில்குமார், "கரோனா முதல் அலையில் பிபிஇ கிட், முகக்கவசங்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இரண்டாவது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாடு முழுவதும் அதிகம் உயிரிழப்பு ஏற்பட்டது.

நீண்டநாள் கோரிக்கை - செவிலியர் கல்லூரி

ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க தருமபுரி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தருமபுரியில் செவிலியர் கல்லூரி வேண்டுமென்ற நீண்டநாள் கோரிக்கையை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 25 செவிலியர் கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அனுமதி கிடைத்தவுடன் நிச்சயமாக தருமபுரியில் ஒரு செவிலியர் கல்லூரி தொடங்கப்படும். அடுத்த ஆண்டு ஒன்றிய அரசிடமிருந்து அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு மருத்துவக் கல்லூரியில் சிறப்பு பன்னோக்கு மருத்துவர்கள் உள்ளனர். இவர்கள் மருத்துவம் பார்க்க தனியாக கட்டடம் இல்லை. பொது மருத்துவப் பிரிவில் மருத்துவம் பார்த்துவருகிறார்கள். 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதே கல்லூரி வளாகத்தில் ஒன்றிய அரசிடம் நிதி பெற்று புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

இதையும் படிங்க: 'கோயில்களின் பெயர்கள்; சமஸ்கிருதத்துடன் தமிழும் இடம்பெற நடவடிக்கை'

ABOUT THE AUTHOR

...view details