தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் மதுபான கடைகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்றன. மதுபான கடைகளில் ஐந்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை மதுபானத்தின் அளவிற்கு ஏற்ற வகையில் கூடுதலாக விலை வைத்து விற்பனையாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர். மதுபானத்தின் விலையை விட கூடுதலாக கேட்கும் விற்பனையாளர்களுக்கும் மது பிரியர்களுக்கும் நாள்தோறும் வாக்குவாதம் நடைபெறுவது வழக்கம் ஆகிவிட்டது
வாடிக்கையான நிலையில் தற்போது டாஸ்மார்க் மதுபான கடைகளின் முன் பகுதியில் புகார்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கட்டணம் இல்லா தொலைபேசி எண் என தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் 1800 425 2015 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு பலகை டாஸ்மார்க் மதுபான கடைகளுக்கு முன்பு தொங்க விடப்பட்டுள்ளது.
மதுப்பிரியர்கள் தங்கள் பிரச்சனைகளையும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை தொடர்பான புகார்களையும் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும், கூடுதல் விலையால் மதுப்பிரியர்களுக்கும், அரசு டாஸ்மாக் கடை ஊழியருக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் நிலவியது.