தர்மபுரி:நாகர்கூடல் ஊராட்சிக்குட்பட்ட ஆத்துகொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், சுடுகாட்டிற்குச் செல்ல சாலை வசதி இல்லாததால், அக்கிராம மக்கள் உயிரிழந்தவர் உடல்களை அடக்கம் செய்ய ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய நிலை பலகாலமாக இருந்து வந்துள்ளது.
நாகாவதி அணைக்கு தண்ணீர் செல்லக்கூடிய ஆறு குறுக்கே உள்ளதால் இக்கரையிலிருந்து மறுகரைக்குச் சென்று சுடுகாட்டு பகுதியை அடைய வேண்டும். மாற்று சாலை வழியாக செல்ல வேண்டுமென்றால் நான்கு கிலோமீட்டர் தூரம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது என அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.