தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த நல்லாகுட்லள்ளி கிராமப் பகுதியில் மூக்கனூர் மலை உள்ளது. இந்த மலை 3000 அடி உயரம் கொண்டது. இந்த மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
மூக்கனூரில் முளைத்த புதிய அருவிகள்: கிராம மக்கள் உற்சாக குளியல் - மூக்கனூர் அருவி
தருமபுரி: மூக்கனூர் மலையிலிருந்து புதிதாக தோன்றிய அருவியில் கிராம மக்கள் குளித்து கொண்டாடினர்.
இதன் கரணமாக இந்த மலையின் பல்வேறு பகுதிகளில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன. புதிதாக தோன்றிய இந்த அருவிகளை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவதால், இந்த புது அருவிகளில் அப்பகுதி மக்கள் குளித்தும் மகிழ்கின்றனர். இந்த தண்ணீரானது அருகில் உள்ள ஓடைகளுக்கு சென்று வீணாகிறது.
எனவே மழைக்காலத்தில் வரும் நீரை இப்பகுதி விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் இந்த மலையடிவாரத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலம், வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தி தடுப்பணை கட்டி மழைகாலங்களில் வரும் நீரை சேமிக்கலாம். இதன்மூலம் கடத்தூர் பகுதிகளில் உள்ள சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் கொடுக்க முடியும். அதேபோல் சுமார் 20 கிலோமீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே இப்பகுதியில் சிறிய தடுப்பணையை அரசு உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.