தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தம்பிசெட்டிப்பட்டி கிராமத்தில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை ஒட்டி, சுவர் விளம்பரம் எழுதுவதில் அமமுக-அதிமுகவினர் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் அதிமுக கிளைச் செயலாளர் ஆறுமுகம் என்பவரை அரூர் முன்னாள் எம்எல்ஏவும், அமமுக அமைப்புச் செயலாளருமான முருகன் உள்ளிட்டோர் தாக்கியதாக வழக்கு பதியப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வழக்கில் தொடர்புடயை முன்னாள் எம்எல்ஏ முருகன், ஏகநாதன், தென்னரசு, சிற்றரசு ஆகியோர் இன்று அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்து முன்பிணை பெற்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன், ” ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்ற குக்கர் சின்னமே அடுத்து வரும் தேர்தலுக்கும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.