தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இணைய வழி கடன் வழங்கும் செயலிகளை நெறிப்படுத்த வேண்டும் - எம்.பி. செந்தில் குமார் - தேசிய வங்கிகள் மூலம் கடன்

தருமபுரி: இந்தியா முழுவதும் இணையத்தின் மூலம் கடன் வழங்கும் செயலிகளை நெறிமுறைப்படுத்த வேண்டும் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

need to streamline internet lending processors- MP Senthil Kumar
need to streamline internet lending processors- MP Senthil Kumar

By

Published : Nov 16, 2020, 5:49 PM IST

அவர் எழுதியுள்ள கடிதத்தில், "இந்தியா முழுவதும் பல்வேறு நடுத்தர குடும்பங்கள் அவர்களின் அத்தியாவசியத் தேவைக்காக தேசிய வங்கிகள் மூலம் கடன் பெற முயற்சிக்கின்றனர். தேசிய வங்கிகள் அவர்களின் ஆதாரங்களைச் சரிபார்த்து கடன் வழங்க மாதக்கணக்கில் அவகாசம் எடுத்துக் கொள்வதால் பல நடுத்தர குடும்பத்தினர் இணையவழி மூலம் பாதுகாப்பற்ற கடன் பெற முயற்சிக்கின்றனர்.

இணையவழி மூலம் கடன் வாங்குபவர் உடனடியாக அந்தக் கடனுக்கு ஒப்புதல் வழங்கிவிடுவதால் பொதுமக்களும் விழிப்புணர்வு இல்லாமல் இணையவழி செயலி மூலம் கடன் பெற விண்ணப்பிக்கும்போது எதையும் ஆராயாமல் கடன் பெற்றுக் கொள்கிறார்கள்.

கரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதித்த நடுத்தர குடும்பத்தினர் பலர், தங்களது இயல்பு வாழ்க்கையை மீட்க கடன் பெறுகின்றனர். இந்தக் கடனை சரிவர செலுத்தவில்லை என்றால் அவர்களும், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களும் தொலைபேசி மூலம் மிரட்டப்படுகின்றனர். இதனால் சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

எனவே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேவைப்பட்டால் கடன் வழங்கும் இணையதளங்களைத் தடை செய்தும், இல்லையெனில் இந்தக் கடன் வழங்கும் செயலியை மத்திய ரிசர்வ் வங்கி மூலம் கண்காணித்து பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் நெறிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்றார்.

இதையும் படிங்க: ஆன்லைனில் கடன் வாங்கித் தரும் மோசடி கும்பல்!

ABOUT THE AUTHOR

...view details