மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துப்புரவப் பணியாளர் நல்வாழ்வு தேசிய ஆணைத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹெர்மனி இன்று தருமபுரி நகாரட்சிக்குட்பட்ட கழிவறைகள் சிலவற்றை ஆய்வு செய்தார். அப்போது முறையாக பராமரிக்கப்படாத இரண்டு கழிப்பிடங்களை முறையாக கண்காணித்து பராமரிக்க உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து தருமபுரி ஆட்சியர் மலர்விழி முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், " தருமபுரி மாவட்டத்தில் துப்புரவுப் பணியாளர்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் முறையாக நிறைவேற்றி வருகிறது. மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் முறை தருமபுரியில் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
கழிப்பிடங்களை ஆய்வு செய்த ஜெகதீஸ் ஹெர்மனி கர்நாடக மாநிலத்தில் 13ஆயிரம் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் நிரந்தர பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். அதுபோல தமிழ்நாட்டில் உள்ள 32ஆயிரம் பணியாளர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என்று தெரிவித்தார்.
மேலும், நகராட்சி அளவில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்து அவர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட பணப்பலன்கள் சரியான நேரத்தில் வழங்கவும், துப்புரவு பணியாளர்கள் அனைவரையும் ஈபிஎப் மற்றும் மருத்துவ காப்பீட்டில் உடனடியாக இணைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:’ரோபோ மூலம் குப்பை அள்ளும் சோதனை வெற்றியடைந்தால் அனைத்து இடங்களிலும் செயல்படுத்தப்படும்’