தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் தேசியக் கொடியை ஏந்தியும், பதாகைளை ஏந்தியும் பெண்கள், குழந்தைகள் என 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.