தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மர்மமான முறையில் தொழிலாளி கொலை - பின்னணி குறித்து தீவிர விசாரணை - Murder of a mercenary near Karimangalam

தருமபுரி: விசைத்தறி தொழிலாளி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூக்கிட்ட நிலையில் கூலித்தொழிலாளி
தூக்கிட்ட நிலையில் கூலித்தொழிலாளி

By

Published : Jan 2, 2020, 8:40 AM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் (55), விசாலாட்சி (40) தம்பதியினர். இவர்களுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். குடும்பப் பிரச்னையின் காரணமாக ஆறுமுகம், திருப்பூர் மாவட்டம் மேலப்பாளையத்தில் தங்கி விசைத்தறி தொழில் செய்துவந்துள்ளார் .

கடந்த சில தினங்களுக்கு முன்பு காரிமங்கலம் வந்த ஆறுமுகம், தனது மகள் வீட்டில் தங்கி தனது உறவினர்கள் வீட்டுக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஒட்டப்பட்டி கிராமத்தில் சிவலிங்கம் என்பவரது விவசாயத் தோட்டத்தில் உள்ள மரத்தில் ஆறுமுகம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த காரிமங்கலம் காவல் துறையினர் ஆறுமுகத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னர் விசாரணையில் அடையாளம் தெரியாத நபர்களால் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் ஆறுமுகத்தின் மனைவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:

அமமுக-பாஜக மோதல்! பாஜகவினருக்கு கத்திக்குத்து

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details