தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 31, 2020, 9:11 PM IST

ETV Bharat / state

தெரு விளக்கு மாற்றுவதற்குக்கூட போராட வேண்டியுள்ளது - எம்.பி. செந்தில்குமார்

தருமபுரி: தெருவிளக்கு மாற்றுவதற்குக்கூட போராடித்தான் மக்களுக்குப் பெற்றுத்தர வேண்டிய சூழ்நிலை உள்ளது என்று தருமபுரி எம்.பி. செந்தில்குமார் தெரிவித்தார்.

senthikumar
senthikumar

தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தருமபுரி தொகுதி மக்களுக்கு ஏற்கனவே கிராம சபைக் கூட்டம் வாயிலாக தெருவிளக்கு பிரச்னை குறித்து அலுவலர்களிடம் முறையிட்டு ஒரு வார காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களவை உறுப்பினர் அதன் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் எனக் கேட்டிருந்தேன்.

தருமபுரி நகராட்சி பகுதியில் இருந்து சமூக வலைதளம் வழியாக மின் விளக்கு எரியவில்லை எனப் பல புகார்கள் வந்தன. தெருவிளக்கு எரியவில்லை என நகராட்சிக்கு கடிதம் வழங்கியும் மெத்தனப் போக்கில் இருந்தனர். மீண்டும் ஒரு கடிதத்தில் தெருவிளக்கு மாற்றும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என கடிதம் மூலம் நகராட்சிக்கு தெரிவித்திருந்தேன்.

அதன் பிறகுதான் தருமபுரி நகராட்சியில் பழுதடைந்த தெரு விளக்குகளை மாற்றினர். மாவட்டத்தில் கிராம ஊராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் சிற்சில பிரச்சினைகள் உள்ளன. இந்த அரசாங்கத்திடம் வேலை வாங்குவது கடினமாக உள்ளது. தெருவிளக்கு மாற்றுவதற்குக்கூட மக்களவை உறுப்பினர் போராட வேண்டியிருக்கிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:’முகக்கவசம் அணியாத 500 பேர் வீட்டிற்கு கடிதம்’: நெல்லை காவல் துறையினர் புதுமையான நடவடிக்கை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details