தருமபுரி:பிரைம் பாய்ண்ட் பவுண்டேஷன் என்ற அமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றிய பணிகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அது தவிர ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அளவில் சிறப்பாக பணியாற்றிய உறுப்பினர்களுக்கு சன்சாத் ரத்னா விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
இந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் 453 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இவர் சுய முயற்சி விவாதங்கள், தனிநபர் மசோதாக்கள், கேள்விகள் உள்ளிட்டவற்றில் பங்கு பெற்று தமிழ்நாடு அளவில் முதல் இடத்திலும், அகில இந்திய அளவில் 17ஆவது இடத்திலும் உள்ளார்.