தர்மபுரி: சீன தூதரகம் வழங்கிய பல்ஸ் ஆக்ஸி மீட்டர், ஆக்சிஜன் கன்சண்ட்ரேட்டர்களை, தர்மபுரி அரசு கல்லூரி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவள்ளியிடம் திமுகவை சோ்ந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இன்று(ஜூன்.29) வழங்கினார். இதனைத் தொடர்ந்து 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தாய் சேய் நல கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தர்மபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலையில் எதிர்பார்த்ததைவிட பாதிப்பு அதிகளவில் இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டது.
அரசு உதவியுடன் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. சீன தூதரகத்திலிருந்து பல்ஸ் ஆக்ஸி மீட்டர், ஆக்சிஜன் காண்சடேடர் கோரியிருந்தோம் அவர்களும் உதவிகளை வழங்கினர். தாய் சேய் மருத்துவமனைக்காக கட்டிடம் கட்டப்பட்டது. கரோனா மூன்றாம் அலை தாக்கம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் வகையில் அனைத்து அறைகளுக்கும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.