தருமபுரிமக்களவை உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமார் இன்று (ஜன.3) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'தருமபுரியில் திராவிட முன்னேற்றக் கழகம் வலிமையாக உள்ளது. ஊடகத்தில் பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) தமிழகத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட தேர்ந்தெடுத்ததாக செய்திகள் வெளியாகின. தற்போது, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை வைத்து தோற்கடிக்க முடியும். இல்லையென்றால், பாஜக கட்சிக்கு தருமபுரி தொகுதி ஒதுக்குங்கள்; மிக சுலபமாக திராவிட முன்னேற்றக் கழக கட்சியைச் சேர்ந்தவர் வெற்றி பெறுவார்.
தருமபுரியில் பிரதமர் வேட்பாளாராக மோடி?: என்னுடைய பலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான். அண்ணாமலை மாநிலத் தலைவர் தானே அவர் வரட்டும்; டெபாசிட் இழப்பார். தருமபுரியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டாலும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அவரை தோற்கடிப்பார். பிரதமர் வேட்பாளரை தோற்கடித்த பெருமையை பெற்றுத் தருவோம்’ என்றார்.
சூடம் ஏற்றினால் தருமபுரி எம்.பி. வந்து விடுவார் என அண்ணாமலை பேசியிருக்கிறாரே என்ற கேள்விக்கு,'வீட்டில் சூடம் ஏற்றுபவர்களை பற்றி நான் பேசவில்லை. மதச்சார்பற்ற அரசு நிகழ்ச்சி மற்றும் விழாக்களில் மதச்சார்பற்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்பது அண்ணா முதன்முறையாக ஆட்சி அமைந்தபோது, செயல்படுத்திய அரசாணை. நான் கொள்கை பிடிப்பில் வலுவாக இருக்கிறேன்.
அண்ணாமலைப் போல, கர்நாடகாவில் வேலை செய்யும்போது, நான் பெருமைக்குரிய 'கன்னடன்' என்று சொல்லிவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்து வேறொன்று பேசுவது போல எனக்கு கிடையாது. வாழ்க்கையில் நான் பிடிப்புடன் இருக்கிறேன். மதச்சார்பற்ற அரசு, மதச்சார்பற்ற அரசாங்கமாக இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் சூடம் ஏற்றும்போது, நான் அங்கு செல்லவில்லை.
ரூ.1928 கோடி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்: சாலையில் ஒரு மதத்தை கொண்டு வரும்போது தான், அந்த ஆட்சேபனை தெரிவித்தேன். ஒகேனக்கல் உபநீர் திட்டத்தை பற்றி பொதுக்கூட்டம் போட்டுவிட்டு, அதைப் பற்றி அண்ணாமலை எதுவும் பேசவில்லை. அந்த திட்டம் தவறு என்று உரைத்திருக்கிறார்.