தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி தொடக்கம்!

தருமபுரி: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல துறையிலுள்ள சிறப்பு பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால் வங்கி துவக்க விழா  தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  தாய்ப்பால் வங்கி  dharmapuri govt hospital  mother milk bank
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி தொடக்கம்

By

Published : Feb 27, 2020, 2:55 PM IST

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சீனிவாசராஜ், சென்னை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பொது மேலாளர் சீதாராமன் ஆகியோர் இணைந்து தாய்ப்பால் வங்கியைத் திறந்து வைத்தனர்.

இந்த தாய்ப்பால் வங்கியானது, சென்னை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் கூட்டாண்மை சமூக பொறுப்பின் மூலம் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாய்ப்பால் வங்கி திறப்பு விழாவில், தாய்ப்பால் வங்கியில் தாய்ப்பாலை தானமாக கொடுப்பது குறித்தும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும், குழந்தை பிறந்தது முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டும் கொடுப்பதால் குழந்தைகளின் இறப்பு விகிதம், தொற்று நோய், வயிற்றுப் போக்கு தடுக்கப்படுவது குறித்தும் மார்பக புற்றுநோய் தடுக்கப்படுவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி தொடக்கம்

இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:நல்லகண்ணுவிற்கு வீடு ஒதுக்கி அரசாணை வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details