தருமபுரி மாவட்டம், செக்கோடி அடுத்த ஆலமரத்து கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (29). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜோதிக்கும் (24) கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் ஜோதி சிலமாதங்களுக்கு முன்பு பிரசவித்த நிலையில், நேற்றுமுன்தினம் பிரசவத்திற்காக தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அலட்சியதால் இளம்பெண் இறந்ததாக கணவர் புகார் - பிரசவ வலி
தருமபுரி: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் பிரசவத்தின்போது இளம்பெண் உயிரிழந்ததாக கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்துள்ளனர். இதில் ஜோதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட சில நிமிடங்களில் அவருக்கு அதிகளவு ரத்தபோக்கு ஏற்பட்டு, சிகிச்சைப் பலனின்றி ஜோதி உயிரிழந்தார்.
இதை கேட்டு வேதனையடைந்த காந்தி, தருமபுரி நகர காவல் நிலையத்தில் தன் மனைவிக்கு மருத்துவர்கள் அலட்சியமாக சிகிச்சை அளித்ததால் தான் தனது மனைவி உயிரிழந்ததாகவும், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.