தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த சந்தாரபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. விவசாயியானஇவர், 30க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். தினமும் அருகிலுள்ள வனப் பகுதிகளுக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, மாலையில் வனப் பகுதியை ஒட்டியுள்ள தனது விவசாய நிலத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்திருப்பது வழக்கம்.
இன்று ஆடுகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைப்பதற்கு பட்டிக்குள் சென்ற அவர், 10க்கும் மேற்பட்ட ஆடுகள் கழுத்து மற்றும் உடல் பகுதிகளில் காயம் ஏற்பட்டு மர்மமான முறையில் இறந்துகிடந்தன. மேலும், ஒருசில ஆடுகள் பலத்தக் காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்ததைக் கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார்.