தருமபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதால் கரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக உள்ளது. தொடர்ந்து மாவட்ட காவல்துறையினர் 10 சோதனைச் சாவடிகள் அமைத்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களைக் கண்காணித்துவருகின்றனர்.
பழைய தருமபுரி, ஒட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் சுற்றித் திரிவது அதிகரித்துள்ளது. ஆகவே காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு தேவையின்றி சுற்றித்திரிந்த 100 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்தனர். காவல் துறையினர் இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு முகக்கவசம் அணிந்துசெல்ல வேண்டும் என அறிவுறுத்தித்தினர்.