தர்மபுரி: ராஜாகொல்லஅள்ளி தீப்பெட்டி கிராமத்தில் கிமு ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த கற்கால மனிதர்களின் கல்திட்டைகளை தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பார்வையிட்டார். அப்போது பேசிய அவர் “65 ஏக்கர் பரப்பளவில் 200க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் உள்ளன.
கல்திட்டைகள் ஆதிமனிதன் ஈமக்குழிகளாக கருதப்படுகின்றன. கல்திட்டை குறித்து தொல்லியல் துறை ஆய்வு செய்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. கல் திட்டைகளை சிலர் சேதப்படுத்தி வருகிறார்கள். எனவே இப்பகுதி முழுவதும் வேலி அமைத்து வெளிஆள்கள் உள்ளே நுழையாத வகையில் பாதுகாக்க வேண்டும்.
அகழ்வாராய்ச்சி செய்ய முடிவு: