தமிழ்நாடு

tamil nadu

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பச்சை நிறமாக இருப்பதாக பொதுமக்கள் புகார்: எம்எல்ஏ ஜி.கே.மணி ஆய்வு

By

Published : May 21, 2021, 11:04 PM IST

தர்மபுரி: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பச்சை நிறமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி ஆய்வு மேற்கொண்டார்.

எம்எல்ஏ ஜி.கே.மணி ஆய்வு
எம்எல்ஏ ஜி.கே.மணி ஆய்வு

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் பச்சை நிறமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

குறிப்பாக இலக்கியம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்டப் பகுதிகளில் இந்த குடிநீரை குடிக்கும் பொதுமக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் இன்று (மே.21) பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினரும் பாமக மாநிலத் தலைவருமான ஜி.கே.மணி அலுவலர்களுடன் சென்று ஒகேனக்கல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "கடந்த சில தினங்களாக ஒகேனக்கல் குடிநீர் பச்சை நிறமாக வருகிறது. இதை குடிப்பதால் பொதுமக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது எனத் தகவல் பரவியது. மக்களின் தகவலை அடுத்து உண்மையை அறிய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டோம்.

ஆய்வு செய்ததில் இங்கு தண்ணீர் தூய்மையாக உள்ளது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரை பயன்படுத்த மக்கள் அச்சமோ பீதியோ அடைய வேண்டாம்.

எம்எல்ஏ ஜி.கே.மணி ஆய்வு

தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும். மக்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்"என்றார்.

இதையும் படிங்க: பிரபல தனியார் ஆய்வகமான மெட்ஆல் நிறுவனத்தின் கரோனா பரிசோதனை அனுமதி ரத்து!

ABOUT THE AUTHOR

...view details