தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெறும் வாக்குறுதி மட்டும் தான்... செயலில் ஒன்னத்தையும் காணோம் - பட்ஜெட் குறித்து ஸ்டாலின் - திமுக செய்திகள்

மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, மதுரையில் பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணியில் இதுவரை ஒரு செங்கல்கூட வைக்கவில்லை, அதேபோல்தான் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : Feb 2, 2021, 7:00 AM IST

தர்மபுரி: திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், “சட்டப்பேரவைத் தேர்தல் 2021, ஒரு முக்கியமான தேர்தல். கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழ்நாடு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைப்பது, ஐந்தாண்டு ஆட்சியல்ல, 50 ஆண்டுகளுக்குத் திட்டமிடலுக்கான முயற்சியை மேற்கொள்வதுதான் திமுக ஆட்சியின் நிலைப்பாடு.

கிராமம், நகரம் என்ற பாகுபாடின்றி, எல்லாருக்கும் எல்லாம் என்ற திட்டங்களை நோக்கி நகரும் திட்டம் வைத்திருக்கிறேன். தமிழ்நாட்டு இளைஞர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பு, கல்வியை உருவாக்கும் ஆட்சியாக திமுக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

தொடர்ந்து கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எட்டு வழிச்சாலைத் திட்டத்தை மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். வேளாண் நிலத்தைப் பாதிக்கும் வகையில் அந்தத் திட்டம் உள்ளது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. ஆனாலும் திட்டம் செயல்படுத்தப்படும் எனத் துணிச்சலாக அறிவித்திருக்கிறார்கள்.

2017ஆம் ஆண்டின் மத்திய நிதிநிலை அறிக்கையில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு 2019இல் பிரதமரே அடிக்கல் நாட்டினார். ஆனால் தற்போதுவரை ஒரு செங்கல்லைக்கூட நடவில்லை. அதுபோலத்தான் தற்போதைய நிதிநிலை அறிக்கையும் உள்ளது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details