தர்மபுரி:பாப்பாரப்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா, பாரத மாதா ஆலயம் அமைக்க நிலம் வாங்கி அடிக்கல் நாட்டி இருந்தார். ஆனால், அவர் இளம் வயதிலேயே மறைந்தார்.
சுப்பிரமணிய சிவாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா நினைவாலயம் அமைக்க வேண்டும் என குமரி ஆனந்தன் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இது தொடர்பாக முதலமைச்சர், அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாடு அரசு ஒப்புதல்
இவரின் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு, 2018ஆம் ஆண்டு பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டப வளாகத்தில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நூலகத்துடன் கூடிய பாரத மாதா நினைவகம் அமைக்க ஒப்புதல் வழங்கியது. கட்டுமானப் பணிகள் தொடங்கி கடந்த ஆண்டு பணி முடிவடைந்தது.