தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடனுதவிகளை வழங்கிய உயர்கல்வித்துறை அமைச்சர்!

தருமபுரி: காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கருக்கம்பட்டியில் 260 பயனாளிகளுக்கு ரூ.2.05 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

கே பி அன்பழகன்
கே பி அன்பழகன்

By

Published : Jan 11, 2021, 12:50 AM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கருக்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 260 பயனாளிகளுக்கு ரூ. 2.05 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

பின்னர், உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், "தருமபுரி மாவட்டத்தில் 131 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், 3 மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகையீட்டின் பேரில் விவசாய நகை கடன், பண்ணை சார்ந்த நீண்ட கால கடன்கள், மத்திய காலக்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன், மாற்றுத் திறனாளி கடன், டாப்செட்கோ போன்ற கடன்கள் வழங்கி விவசாயத்திற்கு சேவை செய்து வருகிறது.

கடனுதவிகளை வழங்கிய உயர்கல்வித்துறை அமைச்சர்

தருமபுரி மாவட்டத்தில் பயிர்க்கடன் வழங்க 2019-20ம் ஆண்டிற்கு குறியீடு ரூ.260.00 கோடி ஆகும். இதனில் 44637 விவசாயிகளுக்கு ரூ.314.12 கோடி ரூபாய் பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. 2020-21ம் ஆண்டிற்கு குறியீடு ரூ.325.00 கோடி ஆகும்.

இதனால், டிசம்பர் 2020 முடிய விகிதாசசார குறியீடு ரூ.253.50 கோடி ரூபாயில், டிசம்பர் 2020 முடிய 37595 விவசாயிகளுக்கு ரூ.293.80 கோடி பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் கார்த்திகா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனா்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details