தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரமலான் நோன்புக் கஞ்சி தயாரிக்க பொருட்களை வழங்கிய அமைச்சர் - 700 பேருக்கு நோன்பு கஞ்சி அரிசி வழங்கப்பட்டது

தருமபுரி: புனித ரமலான் நோன்புக் கஞ்சியைத் தயாரிக்க 700 பயனாளிகளுக்கு அரிசியை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.

minister
minister

By

Published : May 3, 2020, 8:52 PM IST

முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தல்படி இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 2,895 பள்ளிவாசல்களுக்கு ரமலான் மாத நோன்புக்கஞ்சி தயாரிக்க அரசு; 5 ஆயிரத்து 450 டன் அரிசி வழங்கவுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 29 பள்ளிவாசல்களில் 20 ஆயிரத்து 595 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 82 டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அரிசி அந்தந்த பகுதிக்குட்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டு கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் காரணமாக, நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ரமலான் நோன்பு கஞ்சித் தயாரிக்க, பள்ளி வாசல்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசியை சமூக இடைவெளியைக் கடைபிடித்து, தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கு பிரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி தயாரித்து வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, பள்ளிவாசல் நிர்வாகிகள் அரசின் உத்தரவினைக் கடைபிடித்து, ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்கும் அரிசியை தகுதியான குடும்பங்களுக்கு பிரித்து வழங்கி, பயன்பெறுமாறு அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

நோன்புக் கஞ்சி காய்ச்ச பொருட்களை வழங்கிய அமைச்சர்

இதனைத் தொடர்ந்து தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புனித ரமலான் நோன்புக் கஞ்சி தயாரிக்க 700 பேருக்கு அரிசியை தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார். நோன்புக் கஞ்சி காய்ச்ச கொடுக்கப்பட்ட அரிசியுடன், பருப்பு, எண்ணெய், வெங்காயம் உள்ளிட்ட மளிகைப் பொருட்களும் 700 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:'ஆரோக்கிய சேது செயலியில் பயனாளர் தகவல்களுக்குப் பாதுகாப்பில்லை'

ABOUT THE AUTHOR

...view details