தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி அளித்த அமைச்சர்! - 5 crore loan assistance to self help groups

தருமபுரி: காரிமங்கலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகளை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.

அமைச்சர்  கே.பி. அன்பழகன் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் காட்சி
அமைச்சர்  கே.பி. அன்பழகன் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் காட்சி

By

Published : May 22, 2020, 6:56 PM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் உயா்கல்விதுறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு 61 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 769 பேருக்கு தலா 5 ஆயிரம் வீதம் 38 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் கடனுதவிகளை வழங்கினார்.

அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “மகளிர் சுய உதவிக் குழு, மகளிர் கடனுதவி தொகையை சிறப்பான முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும், சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, சமுதாய முதலீட்டு நிதியாக 30 மகளிர் குழுக்களுக்கு தலா 50 ஆயிரம் வீதம் 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும், மாவட்டம் முழுவதும் இன்று 192 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 5 கோடியே 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.


இதையும் படிங்க:ஊரடங்கில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த கட்டாயப்படுத்தும் நிதி நிறுவனங்கள்

ABOUT THE AUTHOR

...view details